கணவன் கண்முன்னே மனைவி செய்த துரோகம்…. கணவன் எடுத்த விபரீத முடிவு

சென்னையில் கள்ளத்தொடர்பை கைவிட மறுத்த மனைவியின் கழுத்தை அறுத்து கணவன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை முகலிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் சுகந்தி (32). கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருச்சியை சேர்ந்த லாரி டிரைவர் ஐயப்பன் (40) என்பவரை காதலித்து, திருமணம் செய்து கொண்டார்.

இத்தம்பதிக்கு ஜெயந்தி, வர்ஷினி என்ற 2 குழந்தைகள் உள்ளன. லாரி சாரதியான ஐயப்பன் பெரும்பாலும் வெளியூர்களுக்கு சென்று விடுவார்.

இந்நிலையில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பாக சுகந்திக்கு அதே பகுதியை சேர்ந்த முஜிபுர் ரஹ்மான் (25) என்ற வாலிபருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.

பின்னர் சுகந்தி தன்னுடைய குழந்தைகள் இருவரையும் அழைத்து வந்து முஜிபுர் ரஹ்மானுடன் சேர்ந்து, பள்ளிக்கரணையில் குடும்பம் நடத்தினார். இதனால் கோபித்து கொண்ட கணவர் ஐயப்பன் மனைவியை பிரிந்து சென்று தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 6 மாதத்துக்கு முன்பாக, முஜிபுர் ரஹ்மானை அவரது உறவினர்கள் அழைத்து சென்றுவிட்டனர்.

இதைத்தொடர்ந்து சுகந்திக்கு அதே பகுதியில் உள்ள மேலும் பல ஆண்களுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தான் தனியாக இருப்பதாக கணவர் ஐயப்பனிடம் சொல்லி குடும்பம் நடத்த வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.

கணவன் மீண்டும் தன்னுடன் வந்து தங்கினாலும், சுகந்தி பல ஆண்களுடனான தொடர்பை நிறுத்தவில்லை. மனைவியின் கள்ளத்தொடர்பு ஐயப்பனுக்கு தெரிய வந்ததும் மனம் உடைந்த ஐயப்பன், ‘இனியாவது திருந்து. நல்லபடியாக குடும்பம் நடத்துவோம். ஆண்களுடன் வைத்து உள்ள தொடர்பை நிறுத்திக்கொள்’ என கேட்டுக்கொண்டார்.

சுகந்தியும் திருந்தி வாழ்வதாக உறுதி அளித்திருந்தார். இந்நிலையில் சமீபத்தில் சுகந்தி ஒருவருடன் உல்லாசமாக இருப்பதை ஐயப்பன் நேரில் பார்க்க நேர்ந்ததால் கடும் அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் இனியும் மனைவியை விட்டுவைக்க கூடாது என்று முடிவெடுத்து, அவரை கொலை செய்வது என திட்டமிட்டு, வாய்ப்புக்கு காத்திருந்தார். அதன்படி மாலை குழந்தைகளை விளையாடுவதற்கு வீட்டை விட்டு வெளியே அனுப்பி வைத்தார்.

பின்னர், வீட்டில் இருந்த காய்கறி வெட்டும் கத்தியால் சுகந்தியின் கழுத்தை துடிக்க துடிக்க அறுத்து கொலை செய்துள்ளார். பின்பு தலைமறைவான ஐயப்பனை கைது செய்த பொலிசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*