உயிர் பிரியும் நேரத்தில் காதலன் கேட்ட கடைசி கேள்வி: கதறி அழுத காதலி!

உயிர் பிரியும் நேரத்தில் காதலன் காதலியிடம் திருமணம் செய்து கொள்ளுவாயா எனக் கேட்ட சம்பவம் அனைவரின் மனதையும் கனக்க வைத்துள்ளது. இந்த சம்பவம் அவுஸ்திரேலியாவில் இடம்பெற்றுள்ளது.

மைக்கல் ஒவென்ஸ் (வயது 23) என்பவர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிகப்பட்ட போது மருத்துவ பரிசோதனையில் அவருக்கு ரத்த புற்றுநோய் இருப்பது தெரியவந்தது.

இந்த நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரது தோழி ரோசி அவருடன் இருந்துள்ளார்.

அப்போது ரோசியை தான் காதலிப்பதாகவும் தன்னை திருமணம் செய்து கொள்ள சம்மதமும் கேட்டுள்ளார். அதற்கு எவ்வித தயக்கும் இன்றி சம்மதம் தெரிவித்துள்ளார் ரோசி.

இந்த நிலையில் காதல், திருமணம் குறித்து பேசி சில மணி நேரங்களில் மைக்கேல் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் ரோசியின் மனதைக் கனக்கவைத்துள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*