மனைவியை நண்பருடன் உல்லாசமாக இருக்க வைத்து வீடியோ எடுத்த கணவன்..! பின் கணவருக்கு நிகழ்ந்தது என்ன..?

மகாராஷ்டிராவில் மனைவியை மிரட்டுவதற்காக, அவளை அவனது நண்பருடன் உல்லாசமாக இருக்க வைத்து அதனை வீடியோ எடுத்த கணவரை போலிஸார் கைது செய்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் பன்வெல் நகரை சேர்ந்தவர் ரஜேஷ். இவருக்கு திருமணமாகி சில மாதங்களே ஆன நிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், மனைவி தனது அம்மா வீட்டிற்கு சென்றுள்ளார்.

இந்நிலையில், குறிப்பிட்ட நாள் அன்று தனது மனைவிடம் உன்னுடன் தனியாக பேச வேண்டும் என கூறி அழைத்துள்ளார். அதன்படி இருவரும் பேசிக்கொண்டிருந்த போது, மனைவிக்கு குளிர் பானத்தில் மயக்க மருந்தை கலந்து கொடுத்துள்ளார். இதன் பின்னர் தனது மனைவி சுயநினைவை இழந்த பின்னர், தனது நண்பரை அவருடன் உல்லாசமாக இருக்க வைத்துள்ளார். இதனை வீடியோவாகவும் பதிவு செய்து வைத்துக்கொண்டார்.

இதன்பின்னர், இந்த வீடியோவை வைத்து தனது மனைவியை மிரட்டி வந்துள்ளார். மேலும், இதனை வெளியே கூறினால் இதனை வீடியோவை இணையத்தில் வெளியிடுவதகாவும் கூறி மிரட்டியுள்ளார். வேறு வழியின்றி மனைவியும் கணவரின் மிரட்டலுக்கு பயந்து இருந்துள்ளார்.

இந்நிலையில் இப்பெண்ணின் சகோதரி அளித்த நம்பிக்கையின் பேரில் காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். பாலியல் வன்புணர்வு சட்டத்தின்படி கணவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*