விமானத்தில் மலர்ந்த காதல்…. இறுதியில் நிகழ்ந்த விபரீதம் சம்பவம்

China Eastern Airlines-ல் பணிபுரியும் பணிபெண்-க்கு விமானத்தில் பயணித்த பயணி காதலை தெரிவித்ததால், சம்பந்தப்பட்ட பெண்ணினை விமான நிறுவனம் பணியில் இருந்து நீக்கியுள்ளது!

china Eastern Airlines-ல் பணிப்பெண்ணாக இருப்பவர் எக்ஸ்யோமி. கடந்த மே மாதம் இவர் விமானத்தில் பணிப்பெண்ணாக பயணித்த போது இவருடைய காதலரும் இந்த விமானத்தில் பயணித்துள்ளார். விமானம் பாதி வழி கடக்கையில் திடீரென அவரது நண்பர் எக்ஸ்யோமி-யிடம் தனது காதலை தெரிவித்துள்ளார்.

இச்சம்பவத்தினை விமானத்தில் இருந்த பயனிகள் படம்பிடித்துள்ளனர். அதில் ஒருவர் குறித்த வீடியோவினை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

இதனால், விமானத்தில் ஓர் பணிப்பெண் இவ்வாறு நடந்துக்கொள்ளுதல் தவறு என தெரிவித்து அந்த விமான நிறுவனம் குறித்த இளம்பெண்ணை பணியில் இருந்து நீக்கியுள்ளது.

பயணிகளிடம் பாதுகாப்பினை கருத்தில் கொள்ளாமல் பணிப்பெண் இவ்வாறு நடந்துக்கொள்ளுதல் தவறு என இந்த பணி நீக்கத்திற்கான விளக்கமாக இந்த விமான நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*