பிக்பாஸ் டேனியிடம் மன்னிப்பு கேட்ட ரித்விகா..! ஏன் தெரியுமா?

106 நாள்கள் பிக் பாஸ் வீட்டுக்குள்ளிருந்து வெற்றி பெற்ற ரித்விகாவைச் சந்தித்துப் பேசினோம். பிக் பாஸ்க்காக இந்த 3 நபர்கள்தாம் தனக்கு மிகப்பெரிய உதவி செய்துவிட்டதாக அவர் கூறினார்.

பா. இரஞ்சித் அண்ணா எப்போதுமே எனக்கு முக்கியமான ஒரு நபர். நான் வாழ்க்கையில முன்னுக்கு வரணும்னு விருப்பப்படக்கூடியவர். நான் வெற்றி பெற்றதும் பெரு மகிழ்ச்சினு ட்விட்டர்ல பதிவிட்டார். அடுத்த வாரம் அவரை நேர்ல சந்திக்கப் போறேன்.

நான் பிக் பாஸ்ல கலந்துகிறதுக்கு முக்கியக் காரணம் `ஒருநாள் கூத்து பட இயக்குநர் நெல்சன் சார்தான். அவர்தான் என்னை ஊக்கப்படுத்தி பிக் பாஸ்ல கலந்துக்கச் சொன்னார். மேலும், பிக் பாஸ் வீட்ல நடந்த எல்லாத்துக்கும் நான் டேனியல்கிட்ட Sorry கேட்கிறேன்.

வீட்டுக்குள்ள இருக்குற வரைக்கும் டேனியல், `முகத்துக்கு நேரா ஒரு விஷயத்தை ஏன் பேச மாட்டிக்கிறார்னு கோபத்துல இருந்தேன். அதுக்காக அவர்கூட நான் சரியாவே பேசலை. வெளிய வந்ததுக்கு அப்புறம் அவர்கிட்டயும் அவர் மனைவிகிட்டயும் கெட்-டு-கெதர்ல சந்தித்துப் பேசினேன்.

வீட்டுக்குள்ள இருந்துகிட்டு உங்களை வெறுத்துக்காக ஸாரி டேனியல். என்று வருத்தத்துடன் கூறினார் ரித்விகா.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*