3 நாட்களில் காலா கலெக்‌ஷன் அவுட் முதல் இடத்திற்கு வந்த தளபதி – முழு விவரம்

தளபதி விஜய் நடிப்பில் சர்கார் படம் சமீபத்தில் திரைக்கு வந்துள்ளது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

சர்கார் படத்தில் பேசியிருக்கும் விஷயத்தை ஆளும்கட்சியினரால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. இதனால் பேனர்களை கிழித்து வன்முறையில் ஈடுபட்டனர். பல அமைச்சர்களும் விஜய்க்கும், சர்கார் படத்துக்கும் மிரட்டும் தொனியில் எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில் வசூல் மட்டும் இப்படத்திற்கு குறையவே இல்லை, முதல் மூன்று நாட்களில் தமிழகத்தில் மட்டும் ரூ. 63 கோடி வசூல் செய்துள்ளது. இதன் மூலம் இந்த வருடத்தில் அதிகம் வசூல் செய்த படம் தமிழகத்தில் சர்கார் தானாம். மேலும் 3 நாட்களில் காலா வசூலை சர்கார் பின்னுக்கு தள்ளியுள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*