Home / செய்திகள் / மகளிர் விடுதி ரகசிய கேமரா… போலீசில் சஞ்சீவி அளித்த அதிர்ச்சி வாக்குமூலம்

மகளிர் விடுதி ரகசிய கேமரா… போலீசில் சஞ்சீவி அளித்த அதிர்ச்சி வாக்குமூலம்

சென்னை ஆதம்பாக்கத்தில் கைதான சஞ்சீவி, சிவில் என்ஜினீயர் எனவும் 10 ஆண்டுகளாக கட்டுமான தொழிலில் உள்ள இவர், கடந்த 2012ம் ஆண்டு மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் மோசடி புகாரில் கைது செய்யப்பட்டவர் எனவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதன்பிறகு, ஆதம்பாக்கம் வீட்டை பெண்கள் தங்கும் விடுதியாக மாற்றியதாகவும், ஆன்லைன் விளம்பரத்தை பார்த்து தலா 7 ஆயிரம் ரூபாய் வாடகைக்கு 6 பெண்கள் வந்ததாகவும் கூறியுள்ளார்.

அந்த பெண்கள் அனைவரும் பகலில் வேலைக்கு சென்று விடுவதால், அந்த சமயத்தில், தனது கட்டுமான நிறுவனத்தின் அலுவலகமாக விடுதியை பயன்படுத்திக் கொண்டதாகவும் சஞ்சீவி தெரிவித்துள்ளார்.

தன்னிடம் வேலை பார்த்த 30க்கும் மேற்பட்ட பெண்களுடன் உறவு வைத்திருந்ததாகவும், அதை வீடியோவில் பதிவு செய்து வைத்திருப்பதாகவும் அதிர்ச்சி தகவலை வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

அதுபோலவே, விடுதியில் தங்கி உள்ள பெண்களையும் தனது பாலியல் ஆசைக்கு சம்மதிக்கச் செய்வதற்காக, ரகசிய கேமராக்களை வைத்ததாகவும், அரைகுறை ஆடைகளில் இருப்பதை படம் பிடித்து மிரட்டி, தனது ஆசையை பூர்த்தி செய்யலாம் என திட்டமிட்டதாகவும் சஞ்சீவி தெரிவித்துள்ளார்.

இதற்காக, ‘வைஃபை’ மூலம் இயங்கும் 9 நவீன ரக சிறிய கேமராக்களை ஆன்லைன் மூலம் வாங்கியதாகவும், அவற்றின் விலை தலா 2 ஆயிரத்து 500 ரூபாய் எனவும் கூறியுள்ளார்.

பெண்கள் அனைவரும் வேலைக்கு சென்ற பிறகு, குளியல் அறைகள், படுக்கை அறைகளில் தானே சென்று கேமராக்களை ரகசியமாக பொருத்தியதாகவும் பல அதிர்ச்சி தகவல்களை சஞ்சீவி தெரிவித்துள்ளார்.

சஞ்சீவியை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்துள்ள போலீசார், அவரை போலீஸ் காவலில் எடுத்த விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *