Home / ஏனையவை / மாதவன் மகனுக்கு இப்படி ஒரு திறமையா..? புகைப்படத்துடன் வெளியிட்டு பெருமிதம்

மாதவன் மகனுக்கு இப்படி ஒரு திறமையா..? புகைப்படத்துடன் வெளியிட்டு பெருமிதம்

நடிகர் மாதவன் தமிழ் சினிமாவில் சாக்லேட் பாயாக வலம் வந்தவர். அவரும் ஷாலினியும் நடித்த அலைபாயுதே படத்திற்கு இன்னும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

புதியதாக பார்ப்பது போலவே இருக்கும். பாலிவுட் சினிமாவிலும் நடித்து வரும் அவர் மும்பையிலேயே செட்டிலாகிவிட்டார். அவரின் நடிப்பில் கடைசியாக தமிழில் வெளியான படம் விக்ரம் வேதா.

தற்போது அவர் விண்வெளி அறிஞர் ஒருவரின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு மகன் ஒருவர். அந்த சிறுவன் தேசிய அளவில் நடந்த 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்று முதல் பரிசை தட்டிச்சென்றுள்ளார்.

மாதவன் அதனை புகைப்படத்துடன் பதிவிட ரசிகர்கள் பலரும் அவரை வாழ்த்தியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *