Home / சினிமா / விஸ்வாசம் முதல் நாள் அதிர வைக்கும் வசூல் விவரம்

விஸ்வாசம் முதல் நாள் அதிர வைக்கும் வசூல் விவரம்

நேற்று பேட்ட மற்றும் விஸ்வாசம் ஆகிய இரண்டு படங்கள் திரைக்கு வந்துள்ளன. சிவா-அஜித் குமார் கூட்டணியில் உருவாகியுள்ள விஸ்வாசம் தல அஜித் ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறது.

முதல் நாளில் தமிழ்நாட்டில் மட்டும் விஸ்வாசம் படம் 26.7 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் நேற்றே வெற்றி விழாவை கொண்டாடிய தயாரிப்பாளர் தரப்பில் இருந்து இதுவரை வசூல் பற்றி எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

விஜய்யின் சர்கார் படம் முதல் நாளில் தமிழ்நாட்டில் மட்டும் 31.2 கோடி ருபாய் வசூலித்தது. சர்காரை விட விஸ்வாசம் வசூல் குறைவு தான் என்றாலும், விஸ்வாசம் வேலை நாளில் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *