Home / சினிமா / நான் மதம் மாறவில்லை நடந்தது இதுதான்..? உண்மையை கூறிய பிக்பாஸ் தாடி பாலாஜி

நான் மதம் மாறவில்லை நடந்தது இதுதான்..? உண்மையை கூறிய பிக்பாஸ் தாடி பாலாஜி

பிரபல காமெடி நடிகரான தாடி பாலாஜி தன் மனைவியுடன் போட்ட சண்டை தொடர்பாக பரபரப்பாக பேசப்பட்டார். அதன் பின் அவரும் மனைவி நித்யாவும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

இன்நிலையில் ஹிந்துவாக இருந்த தாடி பாலாஜி வேறு மதத்திற்கு மாறிவிட்டார் என கூறப்பட்டது. அதன்பின் சில நாட்களுக்கு முன்பு மீண்டும் பாலாஜி தாய்மதமான ஹிந்துமதத்திற்கு திரும்பிவிட்டார் என தகவல்கள் பரவியது.

இதுபற்றி அவரிடம் கேட்டபோது அது முற்றிலும் தவறான தகவல் என கூறியுள்ளார். ”நான் மதம் மாறவில்லை. எனக்கு சித்தர்கள் மீது ஆர்வம் அதிகம்.

அவர்கள் என் வாழ்வில் பல அற்புத விஷயங்களை செய்துள்ளனர். திருவண்ணாமலை மூக்குப்பொடி சித்தரை சந்தித்த பிறகுதான் எனக்கு பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது” என பாலாஜி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *