Home / சினிமா / பெற்ற அம்மா முன்பே படுக்கைக்கு சம்மதிக்குமாறு கேட்டனர்..! பகீர் தகவலை வெளியிட்ட நடிகை கனி

பெற்ற அம்மா முன்பே படுக்கைக்கு சம்மதிக்குமாறு கேட்டனர்..! பகீர் தகவலை வெளியிட்ட நடிகை கனி

தமிழில் பிசாசு, பர்மா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் கனி குஷ்ருதி. மலையாள திரையுலகில் பயங்கர வேகமாக வளர்ந்துவரும் நடிகையாக உள்ளார். மா என்ற குறும்படத்தின் மூலம் பிரபலமான இவர் சமீபத்திய பேட்டியில் பல அதிர்ச்சிகரமான தகவல்களை பற்றி பேசினார்.

இவர் மாடல் அழகியாக இருந்து கொண்டே, மலையாள பட வாய்ப்புகளை பெற முயற்சித்த போது, பலர் இவரிடம் நேரடியாகவே அட்ஜஸ்ட் செய்து போக சொன்னதாகவும், ஆனால் அப்படி பட்ட வாய்ப்பே தேவையில்லை என்று அதனை மறுத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனால் பல படங்களில் நடிக்கும் வாய்ப்பை தான் இழந்திருப்பதாக கூறும் கனி, ஒருமுறை தன்னுடைய தாயுடன் பட வாய்ப்பு கேட்டு சென்ற போது, ஒருவர் நேரடியாகவே தன் தாயின் முன்பே அட்ஜஸ்ட் செய்தால் மட்டுமே உங்கள் மகளுக்கு வாய்ப்பு கிடைக்கும் என கூறியது உச்சகட்ட கொடுமை என ஆதங்கப்பட்டுள்ளார்.

எனினும் தன்னுடைய குடும்பத்தினர் தனக்கு பக்கபலமாக இருந்ததால் அனைத்திலும் இருந்து மீண்டு, மீடூ பிரச்சனைக்குப் பின் இதுபோன்ற எந்த தொந்தரவும் இல்லாத வகையில் படவாய்ப்புகள் கிடைப்பதாகவும் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *