ஏழரை சனி யாரை எப்போது தாக்கும் தெரியுமா..? கடுமையான தாக்கம் இவங்களுக்குத்தானாம்!

ஏழரை சனியில் மூன்று வகைகள் உள்ளது. விரைய சனி, ஜென்ம சனி, பாத சனி…அதாவது முதல் சுற்று இரண்டாம் சுற்று மூன்றாம் சுற்று என மூன்று சுற்றுகள் உள்ளது.

ஏழரை சனி
மூன்று இரண்டரை வருடங்களை கொண்டது தான் ஏழரை சனி. முதல் இரண்டரை ஆண்டுகளில் ஏழரை சனியின் தாக்கத்தை உணர்வது இல்லை. இந்த காலத்தில் பொருள் வரவும் இருக்கும். இந்த காலக்கட்டத்தில் சிலரிடம் நல்ல பண வரவு கூட இருக்கும்.

நடுப்பகுதி
ஏழரை சனியின் நடுபகுதியான, அதாவது முதல் இரண்டரை ஆண்டு முடிந்து மூன்றாம் ஆண்டு இடையில் இருந்து தொடங்கும் இந்த சமயத்தில் கடுமையான கெடு பலன்களை கொடுக்கும். இந்த சமயத்தில் தான், ஒருவரின் சொந்த நட்சத்திரத்தில் ஏழரை செல்வதால் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும்.

பாத சனி
கெடுபலன்கள் குறைய ஆரம்பிக்கும். ஆனாலும் இந்த நிலையில் முழுமையான நன்மைகள் நடந்து விடுவது இல்லை. சனி முழுவதுமாக முடிந்ததும் அந்த மனிதர் செட்டிலாகும் வாழ்க்கை வாழ்வதற்கான ஆரம்பங்கள் இந்த பாதச் சனி அமைப்பில் நடக்கும். இந்த சனி 40 வயதிற்குள் வந்தால் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்.

5 வயது வரை சனியை பற்றி கவலை வேண்டாம்..!
விபரம் தெரியாத குழந்தைப் பருவமான ஏறத்தாழ 15 வயது வரை வருகின்ற ஏழரைச் சனியை ஒருபோதும் கணக்கில் எடுத்துக் கொள்ளவே கூடாது.

மேலும் வயதை பொருத்து சனியின் ஆதிக்கம் இருக்கும். மிக எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் வயதிற்கு ஏற்றவாறு கெடுதல்கள், தோல்விகளை சந்திப்பது உள்ளிட்ட பல விஷயங்களை சந்திக்க நேரிடும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*