அஜித் இயக்குனர் பாலா இருவரும் நான் கடவுள் படத்தில் இணைந்து பிரிந்தது எல்லாம் அனைவரும் அறிந்தது தான். ஆனால், தற்போது வரை அவர்களுக்குள் என்ன பஞ்சாயத்து என்பது தெரியவில்லை.
இந்நிலையில் இதுக்குறித்து பிரபல யு-டியுப் சேனலில் பத்திரிகையாளர் ஒருவர் இதை பற்றி முழு விவரத்தையும் கூறியுள்ளார்.
இதில் அஜித் நான் கடவுள் படத்திற்காக முடி வளர்ந்து உடல் எடையை எல்லாம் குறைத்து வந்தாராம், அப்போது அஜித்திற்கு சம்பளமாக ரூ 1 கோடியை பாலா கொடுத்தாராம்.
ஆனால், கடைசி வரை படப்பிடிப்பு என்பதை பாலா தொடங்கவே இல்லையாம். சில மாதங்கள் கழித்து நான் கடவுள் படத்திலிருந்து அஜித் நீக்கப்பட்டதாக தகவல் மட்டுமே வெளியே வர, அஜித் பாலாவிடம் இதுக்குறித்து பேசினாராம்.
இந்த பஞ்சாயத்தை மதுரை அன்புசெழியன், தேனப்பன் ஆகியோர் நடத்தினார்களாம். அதில் கடுமையாக வாக்குவாதம் நடந்ததாம். அஜித் ஒரு கட்டிடத்தில் வாங்கிய ரூ 1 கோடியை திருப்பி தருவதாக கூறிவிட்டாராம்.
ஆனால், பாலா அந்த நேரத்தில் எனக்கு வட்டியும் வேண்டும் என்று கேட்க, அஜித் கடுமையாக வாக்குவாதம் செய்து, உங்களுக்கு என்ன பணம் தானே வேண்டும் என்று அவ்வளவு பணத்தையும் கொடுத்துவிட்டாராம். இது தான் நடந்த உண்மை என்று அவர் தெரிவித்துள்ளார்.