Home / சினிமா / கமல் ஏன் 2.0 படத்தில் வில்லனாக நடிக்க மறுத்தார் தெரியுமா..?

கமல் ஏன் 2.0 படத்தில் வில்லனாக நடிக்க மறுத்தார் தெரியுமா..?

தற்போது பாக்ஸ் ஆபிஸை ஷங்கரின் 2.0 படம் தான் ஆக்கிரமித்துள்ளது. சுமார் 15000 தியேட்டர்களில் வெளிவந்துள்ள இந்த படம் அனைத்து இடங்களிலும் சாதனை வசூல் பெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரம் முதலில் நடிகர் கமல் ஹாசனை மனதில் வைத்து தான் எழுதப்பட்டது என எழுத்தாளர் ஜெயமோகன் கூறியுள்ளார். பறவையியல் நிபுணரான சலிம் அலியை போல இருக்கவே பக்ஷிராஜன் கதாபாத்திரம் எழுதப்பட்டதாம்.

மேலும் 2.0 படத்தின் கதையைக் கேட்ட கமல், பக்ஷிராஜன் வேடத்தில் நடிக்க முதலில் தயங்கி பிறகு நடிக்க சம்பாதித்தார். பின் சம்பள விஷயம் மற்றும் அப்போதைய படங்களின் கால்ஷீட் சூழல் போன்ற காரணங்கள் ஒத்துவராததால், அதன் பிறகே கமலுக்கு பதில் அக்ஷய்குமாரை கமிட் பண்ணியதாக தகவல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *