Home / சினிமா / 100 நாட்கள்.. பாலாஜியுடன் சேர யோசிக்கும் நித்யா என்ன சொன்னார் தெரியுமா.?

100 நாட்கள்.. பாலாஜியுடன் சேர யோசிக்கும் நித்யா என்ன சொன்னார் தெரியுமா.?

தனது கணவருக்கு தான் கொடுத்த கொடுத்த நூறு நாட்கள் முடிந்த பிறகு, நியூ இயரில் புதிதாக வாழ்க்கையை தொடங்குவோம் என நினைப்பதாக பிக் பாஸ் மூலம் பிரபலமடைந்த தாடி பாலாஜியின் மனைவி நித்யா தெரிவித்துள்ளார்.

தற்போது நித்யா கூறுகையில், “பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு எனது வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கு. ஒரு யூடர்ன் என்றே சொல்லலாம். நிறைய நல்ல விஷயங்கள் நடந்திருக்கு. நிறைய வாய்ப்புகள் வரத்துவங்கி இருக்கிறது.

புற்றுநோயாளிகளுக்காக நானும் எனது மகளும் எங்களுடைய முடியை கொடுத்திருக்கிறோம். அதனால் தான் இந்த புது ஹேர் ஸ்டைல். பெண்கள் முன்னேற்றத்திற்காக இதே மாதிரி நிறைய விஷயங்கள் செய்ய விரும்புகிறேன். வாழ்க்கை ஆயிரம் மடங்கு மாறியிருக்கிறது.

முன்பு பாலாஜியை பார்க்கக்கூட மாட்டேன். ஆனால் இப்போது பார்த்து பேசும் அளவுக்கு நிலைமை மாறியிருக்கிறது. பாலாஜிக்கு நான் கொடுத்த நூறு நாட்கள் முடிந்த பிறகு நியூ இயரில் புதிதாக வாழ்க்கையை தொடங்குவோம் என நினைக்கிறேன்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கமல் சாரை இரண்டு முறை பார்த்தேன். என் மீது அக்கறை காட்டும் அவருக்கு என்றும் நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *