Home / ஏனையவை / பிக்பாஸ் வீட்டில் நடந்த மோசமான சண்டை கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் மருத்துவமனையில் அனுமதி

பிக்பாஸ் வீட்டில் நடந்த மோசமான சண்டை கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் மருத்துவமனையில் அனுமதி

பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் தற்போது ஹிந்தி பிக்பாஸ் 12வது சீசனில் பங்கேற்று வருகிறார். அவருக்கு இந்த நிகழ்ச்சி மூலம் மிக அதிக அளவில் ரசிகர்கள் கிடைத்துள்ளனர். அவருக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் அதிக ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று ஸ்ரீசாந்த் Surbhi Rana என்பவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். சண்டை முற்றியதால் ஸ்ரீசாந்த் கடும் கோபத்தில் பாத்ரூம் சென்று கதவை மூடிக்கொண்டார். அவரை வெளியில் கொண்டு வர பலர் முயன்றும் முடியவில்லை.

பாத்ரூம் சுவற்றில் ஸ்ரீசாந்த் கோபத்தில் மோதிக்கொண்டுள்ளார், அதனால் அவரின் தலையில் வலி ஏற்பட்டுள்ளது. அதனால் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இந்த தகவலை ஸ்ரீசாந்தின் மனைவி ட்விட்டரில்பதிவிட்டுள்ளார். பயப்படும் அளவுக்கு எதுவும் இல்லை என பிக்பாஸ் டீம் கூறியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது ஒருபுறமிருக்க தற்போது வந்துள்ள புதிய டீசரில் ஸ்ரீசாந் அவரை தாக்குவது போல காட்டப்பட்டுள்ளது. அது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *