2.0 இந்திய சினிமாவில் பாகுபலிக்கு பிறகு பல சாதனைகளை படைத்து வரும் படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
அதனால் தான் வார நாட்களான நேற்று கூட இப்படத்திற்கு வசூல் கொட்டியது, இந்நிலையில் 2.0 உலகம் முழுவதும் 4 நாட்களில் ரூ 400 கோடி வசூல் செய்திருந்தது.
தற்போது 5வது நாளான நேற்று ரூ 50 கோடி வசூல் செய்துள்ளது, இதில் ஹிந்தியில் மட்டுமே ரூ 13 கோடி வசூல் செய்துள்ளது. இதன் மூலம் 5 நாட்களில் 2.0 உலகம் முழுவதும் ரூ 450 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.