நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்-ஷங்கர் கூட்டணியில் உருவான 2.0 படம் உலகம் முழுவதும் வசூல் சாதனை படைத்து வருகிறது. 500 கோடி என்கிற மைல்கல்லை தொட்ட முதல் தமிழ் படம் என்கிற பெருமையை அது பெற்றுள்ளது.
இந்நிலையில் தற்போது ரஜினிகாந்த் தன் மனைவி மற்றும் பேரன்களுடன் சென்னையில் உள்ள சத்யம் திரையரங்கில் 2.0 படத்தை பார்த்துள்ளார்.
அந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றனர்.