Home / சினிமா / விஜய் டிவி Jodi நிகழ்ச்சியில் ஏற்பட்ட சண்டை- ஷோவில் இருந்து வெளியேறும் பிரபலம்

விஜய் டிவி Jodi நிகழ்ச்சியில் ஏற்பட்ட சண்டை- ஷோவில் இருந்து வெளியேறும் பிரபலம்

விஜய் தொலைக்காட்சி பல கோடி மக்கள் பார்க்கும் ஒன்று. இதில் இளைஞர்களை கவரும் வண்ணம் அதிக நிகழ்ச்சிகள் இருக்கிறது, புதிது புதுதாக உருவாக்கிக் கொண்டும் உள்ளனர்.

இப்போது அப்படி பிரபலமாக Jodi Fun Unlimited என்ற நடன நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. வாரா வாரா நிகழ்ச்சி பார்க்க ஆர்வத்தை தூண்டுகிறது, நடுவர்களாக பிக்பாஸ் புகழ் மஹத்-யாஷிகா, பிரபல தொகுப்பாளர்களான டிடி-மாகாபா உள்ளனர்.

இந்த 4 நடுவர்களுக்கு ஜோடிகள் பிரித்து தரப்பட்டுள்ளது. காதல் ரவுண்டில் மஹத்தின் டீம் சித்ரா-குமரன் அசத்தலாக நடனம் ஆடினர், ஆனால் அவர்களுக்கு மதிப்பெண் குறைவாக தான் இருந்தது, இத்தனைக்கு மற்ற எல்லோரையும் விட இவர்கள் தான் நன்றாக ஆடினார்கள் என்று கூறலாம்.

இதனால் கோபப்பட்ட மஹத் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் சண்டை போட்டுள்ளாராம். பிரபலம் பார்த்து எல்லாம் மதிப்பெண் கொடுக்காதீர்கள், நடனத்திற்கு ஏற்ப கொடுங்கள் என்று சரியான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

பின் ஒருகட்டத்தில் இதுபோல் நடந்தால் நிகழ்ச்சியில் இருந்து கண்டிப்பாக விலகிவிடுவேன் என்றும் கூறியிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *