Home / சினிமா / நடிகர் முரளி இதனால் தான் கோடிக்கணக்கில் கடனாளியானார் – பலரும் அறிந்திராத சோகம்

நடிகர் முரளி இதனால் தான் கோடிக்கணக்கில் கடனாளியானார் – பலரும் அறிந்திராத சோகம்

நடிகர் முரளி மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றவர். கலரான நடிகர்களை தாண்டி கருப்பாக இருந்தாலும் மனம் கவர முடியும் என ரஜினி, விஜயகாந்த் பாணியில் ஜெயித்தவர்.

ஆக்சன் படங்களை விட எதார்த்தமான படங்களில் நடித்து பெண்களின் மனதை கவர்ந்தவர். இவரின் இழப்பு தமிழ் சினிமாவுக்கு மிகுந்த சோகமாகும்.

இவரது மகன் அதர்வாவும் தற்போது வளர்ந்து வரும் இளம் நடிகராக ஜொலித்து வருகிறார்.

இவர் கடைசி காலகட்டத்தில் கடனில் சிக்கித்தவித்தாராம். வழக்கமாக நடிகர்களின் கடனுக்கு காரணம் சொந்த படம் எடுத்து தோல்வி அல்லது தவறான பழக்கங்களாக இருக்கும்.

ஆனால் முரளி கடனுக்கு காரணம் இவர் நடித்த படங்கள் வெளியாவதில் ஏற்பட்ட சிக்கலை தீர்க்க சொந்த பணத்தை கொடுத்ததால் தான் கடனில் சிக்கினாராம். இது ரசிகர்கள் பலருக்கும் தெரிந்திடாத சோக கதை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *