தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தர்போது இணைய தளங்களில் வைரலாகி வருகிறார். இதற்கு காரணம் மீம் கிரியேட்டர்களுக்கு அவரை வைத்து கிடைத்த கண்டெண்ட்தான்.
அண்மையில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது, மைக்குகள் வைக்க மேடை அமைக்கபப்ட்டிருந்தது. பேட்டியளிக்க தமிழிசை வந்த போது அவருக்கு மைக் வைத்திருந்த மேடையின் உயரம் இவருக்கு சரியாக எட்டவில்லை.
இதனால், ஸ்டூல் கொடுங்கள் என அருகில் இருந்தவர்களிடம் கேட்டார். ஆனால் அங்கு ஸ்டூல் இல்லாததால் பக்கெட்டை எடுத்து கவிழ்த்து அதன் மீது ஏறி நிற்க வைத்து தமிழிசையை பேட்டியளிக்க வைத்தனர். இந்த சம்பவம் குறித்த வீடியோ வெளியாகி அது வைரலாகி வருகிறது.