ரஜினியுடன் பேட்ட, சீதக்காதி போன்ற படங்கள் விஜய் சேதுபதியின் நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ளன. அதிலும் சீதக்காதி படம் நாளை வெளியாக உள்ளது.
இந்நிலையில் இந்த படத்திற்கு ப்ரோமோஷன் செய்யும் விதமாக பிரபல நாளிதழ் ஒன்றுக்கு விஜய் சேதுபதி அளித்த பேட்டியில் தனது முதல் படத்தின் முதல் காட்சியை பற்றி கூறியுள்ளார்.
அதில், வர்ணம் என்ற படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. முதல் படமான அதில் பின்தங்கிய வகுப்பை சேர்ந்தவராக நடித்தேன். அப்படத்தில் எனது முதல் காட்சி என்னவென்றால் என் வாயில் ஒருவர் சிறுநீர் கழிப்பார், அது தான் என்றார்.
இந்த காட்சியில் நடித்த பிறகு அங்கிருந்த பலரும் கைத்தட்டினார்களாம். ஒரு நடிகனை ஊக்குவிப்பது கைத்தட்டல்களும் பாராட்டுகளும் தான் எனவும் கூறினார்.