Home / சினிமா / தயாரிப்பாளர் சங்க கதவு பூட்டை உடைக்க முயற்சித்த நடிகர் விஷால் கைது

தயாரிப்பாளர் சங்க கதவு பூட்டை உடைக்க முயற்சித்த நடிகர் விஷால் கைது

விஷால் தயாரிப்பாளர் சங்க தலைவர் பொறுப்பிற்கு வந்தது அனைவரும் அறிந்ததே. ஆனால், விஷால் சங்கத்தில் நிறைய முறைக்கேடுகள் செய்துள்ளார் என்று நேற்று ஒரு சிலர் சங்கத்திற்கு பூட்டு போட்டனர்.

அதை தொடர்ந்து விஷால் இன்று தயாரிப்பாளர் சங்க கதவை பூட்டை உடைத்து உள்ளே போக முயற்சித்தார்.

ஆனால், அங்கிருந்த போலிஸார் அவரை தடுத்துள்ளனர், அது மட்டுமின்றி தயாரிப்பாளர் சங்கத்திற்கு போடப்பட்ட பூட்டை உடைக்க அனுமதிக்க முடியாது; சட்டவிரோதமாக இங்கு கூடியதாக கைது செய்ய நேரிடும் என்றும் கூறியுள்ளனர்.

இதனால் விஷாலுக்கும், காவல்துறையினருக்கும் கடும் வாக்குவாதம் நடந்து வந்தது. அதை தொடர்ந்து விஷால் மீண்டும் பூட்டை உடைக்க முயற்சிக்க, விஷாலை கைது செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிகழ்வு கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, மேலும், எஸ்.வி.சேகர் மற்றும் ஒரு சிலர் முதலமைச்சரை சந்தித்து விஷால் மீது புகார் கொடுக்க இன்று சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *