Home / சினிமா / என்னை எமாற்றுகிறார்கள்…! கதறும் பிக்பாஸ் ஓவியா

என்னை எமாற்றுகிறார்கள்…! கதறும் பிக்பாஸ் ஓவியா

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ஓவியா புகழின் உச்சத்துக்கே சென்று விட்டார். அந்த நிகழ்ச்சியால் அவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உருவானது.

இதனையெடுத்து, அவர் நடிக்கும் படங்களை அவரது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். அவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு கலந்து கொண்டபின் இதுவரை அவரின் எந்தப்படமும் வெளியாகவில்லை. அவர் சில படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தில் நடிகை ஓவியா ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார். இது குறித்து நடிகை ஓவியா மனவேதனையுடன் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார்.

எனது ரசிகர்கள் என்னை அவர்கள் குடும்பங்களில் ஒருவராக பார்க்கிறார்கள். சிலர் என்னுடைய ரசிகர்களை தவறாக பயன்படுத்தி முறைகேடுகளில் ஈடுபடுத்தி சம்பாதிக்கிறார்கள் என்று பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

அதாவது, அவர் சின்ன சின்ன வேடங்களில் நடித்த படங்களுக்கு கூட ஓவியா பெயரை சொல்லி விளம்பரம் தேடுகிறார்கள். இது தனக்கு மிகுந்த மனவருத்தம் அளிப்பதாக தெரிவித்துள்ளார் நடிகை ஓவியா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *