பத்து வருடங்களாக திரையுலகை விட்டே ஒதுங்கியிருந்த இயக்குநர் சரண் மீண்டும் படம் இயக்கத்துவங்கியுள்ளார். இதை பிக் பாஸ் ஆரவ் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.
காதல் மன்னன் படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகி தன் படத்தின் ஜோடிகளாக இருந்த அஜீத், ஷாலினியை காதலர்களாக மாற்றி அவர்களது திருமணத்துக்கே காரணமாக இருந்தவர்.
அஜீத்தை வைத்து காதல் மன்னன், அமர்க்களம், அசல், அட்டகாசம் ஆகிய நான்கு படங்களை இயக்கியவர் சரண். வசூல்ராஜாவுக்குப் பின்னர் கடன் சுமைகளுக்கு ஆளாகி, மெல்ல சினிமாவை விட்டு ஒதுங்கினார்.
இந்நிலையில் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் என்ற படத்துடம் மீண்டும் களம் இறங்குகிறார். இதில் ஆரவ் மார்க்கெட் ராஜாவாக டான் கதாபாத்திரத்தில் வருகிறார். ராதிகா சரத்குமார், நாசர், யோகி பாபு, சாயாஜி ஷிண்டே, சாம்ஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.