தமிழ் சினிமாவில் திருட்டு டிவிடி மற்றும் இணையத்தில் வெளியாவதை தடுக்க தயாரிப்பாளர் சங்கம் தற்போது பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில் பேட்ட படத்தை இன்று தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இது திரையுலகையே அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
அண்மையில் பேட்ட மற்றும் விஸ்வாசம் படத்தை இணையதளம் இணையத்தில் வெளியிட தடை விதித்தது. இந்நிலையில் பேட்ட திரைப்படம் வெளியான முதல் நாளன்றே தமிழ்ராக்கர்ஸ் இணையதளத்தில் சட்டவிரோதமாக வெளியாகியுள்ளது.