சூப்பர் ரஜினிகாந்த் என்றாலே சினிமாவில் கொண்டாட்டம் தான். கடல் கடந்தும் அவரின் படங்களுக்கு நல்ல மார்க்கெட் இருகின்றது. அப்படியிருக்கையில் அண்டை மாநிலத்தில் வரவேற்பு இருக்காதா என்ன?
கடந்த வருடம் இறுதியில் வெளியான 2.0 தெலுங்கிலும் வந்தது. முதல் நாளே ஆந்திரா மற்றும் தெலுங்கானாவின் ரூ 10 கோடி வசூலை செய்தது.
ஆனால் கடந்த 10 ம் தேதி வெளியான பேட்ட படம் முதல் நாளில் ரூ 1.6 கோடியை மட்டும் தான் வசூல் செய்துள்ளது. 2.0 படத்துடன் வெறும் 20 சதவீதம் மட்டுமே.
இது படத்தை வெளியிட்ட தயாரிப்பாளர் அசோக் வல்லபனேனி என்பவருக்கு வருத்தமே. ஒரே நேரத்தில் பிரபல தெலுங்கு நடிகர்களின் படம் வெளியானதே காரணம் என சொல்லப்படுகிறது.
ஏற்கனவே தியேட்டர் கிடைப்பதில் சிக்கிலும் இருந்தது. இதனால் தயாரிப்பாளர் வெறும் 10 சதவீதத்தை தான் முதலீட்டில் எடுத்துள்ளதாக தெலுங்கு வட்டாரம் கூறுகிறது.