Home / சினிமா / விஸ்வாசம், பேட்ட..! 5 நாள் முடிவில் வசூல் வேட்டையில் யார் முதலிடம் தெரியுமா?

விஸ்வாசம், பேட்ட..! 5 நாள் முடிவில் வசூல் வேட்டையில் யார் முதலிடம் தெரியுமா?

விஸ்வாசம், பேட்ட இந்த பொங்கல் விருந்தாக திரைக்கு வந்துள்ள படங்கள். இந்த இரண்டு படங்களுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தை தாண்டி மற்ற அனைத்து இடங்களிலுமே ரஜினியின் கை பல மடங்கு அதிகமாக உயர்ந்துள்ளது.

ஆனால், தமிழகத்தில் மட்டும் அஜித்தின் கை தான் ஓங்கியுள்ளது. தற்போது தமிழகத்தில் மட்டும் விஸ்வாசம் எப்படியும் ரூ 60 கோடி வரை வசூல் செய்திருக்கும் என கூறப்படுகின்றது.

அதேபோல் பேட்ட ரூ 48 கோடி வரை தமிழகத்தில் வசூல் செய்திருக்கும் என தெரிகின்றது.

மேலும், இன்னும் விடுமுறை முடியாததால், எப்படியும் வசூல் நாளுக்கு நாள் அதிகரிக்கும் என்று தான் கூறப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *