Home / சினிமா / பிக்பாஸ் சீசன் 3 ஐ தொகுத்து வழங்க பிரபல நடிகருடன் பேச்சு வார்த்தை..! யார் அந்த நடிகர் தெரியுமா..?

பிக்பாஸ் சீசன் 3 ஐ தொகுத்து வழங்க பிரபல நடிகருடன் பேச்சு வார்த்தை..! யார் அந்த நடிகர் தெரியுமா..?

டிவி நிகழ்ச்சிகளில் பல நிகழ்ச்சிகளுக்கு சவாலாக அமைந்த ஒன்று பிக்பாஸ். கடந்த இரு வருடங்களுக்கு முன் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி பலரின் பார்வை ஈர்த்தது. தமிழ், தெலுங்கிலும் இரண்டு சீசன்களை கடந்துவிட்டது. ஆனால் முதல் சீசன் போல இல்லை என்பதே பலரின் மனநிலை.

தமிழில் கமல்ஹாசன் இரண்டு சீசன்களையும் தொடந்து தொகுத்து வழங்கிவிட்டார். அவர் வரும் வாரங்களில் TRP உச்சத்தில் தான் இருந்தது. தெலுங்கில் முதல் சீசனை ஜூனியர் NTR தொகுத்து வழங்கி வந்தார். அவருக்கு நல்ல வரவேற்பு, ரசிகர்களும் அதிகம் என்பதால் சம்மந்தப்பட்ட சானல் முன்னேற்றம் கண்டது.

அடுத்த சீசனில் தேதி ஒத்துவராததால் அவருக்கு பதிலாக நானி தொகுத்து வழங்கினார். அவரால் நிகழ்ச்சியில் சர்ச்சை, சலசலப்புகளை சமாளிக்க முடியவில்லை என்பதே உண்மை.

இதனால் பாயிண்ட்ஸ் ரீதியாக சானல் ஆட்டம் கண்டது. இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 3 க்காக இப்போதே ஜூனியர் NTR ரிடம் இப்போதே பேச்சு வார்த்தை நடத்தியிருக்கிறார்களாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *