Home / சினிமா / இந்தியன் 2வில் இந்த வேடத்தில் தான் சிம்பு நடிக்க மறுத்தார்..!

இந்தியன் 2வில் இந்த வேடத்தில் தான் சிம்பு நடிக்க மறுத்தார்..!

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் அடுத்து நடிக்கவுள்ள இந்தியன் 2 மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகை காஜல் அகர்வால் ஹீரோயினாக நடிக்கவுள்ளார்.

இதே படத்தில் சிம்பு கமலின் பேரனாக நடிக்கவிருந்தார், முதலில் சரி என்று கூறினார், பிறகு என்ன ஆனது என்று தெரியவில்லை, அவர் இப்படத்திலிருந்து விலகினார். ஆனால் கடைசி நேரத்தில் நடிகர் சித்தார்த் தேர்வு செய்யப்பட்டார்.

சித்தார்த் கமல்ஹாசனுக்கு பேரனாக நடிக்கவுள்ளார் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது. முதலில் பொள்ளாச்சியில் துவங்கியுள்ள ஷூட்டிங், அதன்பிறகு வெளிநாடுகளில் 2 மாதம் நடைபெறவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *