சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யாவிற்கும் – பிரபல தொழிலதிபர் வணங்காமுடியின் மகன் விசாகனுக்கும், பிப்ரவரி 11 ஆம் தேதி, சென்னை போயர்ஸ் தோட்டத்தில் உள்ள ரஜினிகாந்தின் வீட்டில் திருமணம் நடைபெற உள்ளது.
இந்த திருமணத்தில், ரஜினி மற்றும் வணங்காமுடியின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்த உள்ளனர்.
சௌந்தர்யா – விசாகன் திருமண வரவேற்பு பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது திருமணம் ஆன அன்றே காலை 11 மணியளவில் சென்னையில் உள்ள லீலா பேலஸ் நட்சத்திர ஓட்டலில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இதனை உறுதி செய்யும் விதத்தில் தற்போது திருமண வரவேற்பு பத்திரிக்கை வெளியாகியுள்ளது. திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், பிரபலங்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு இவர்களை வாழ்த்துவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.