Home / சினிமா / ஆரவுடன் திருமணம் குறித்து உறுதிசெய்கிறார் ஓவியா..! விரைவில் சஸ்பென்ஸ்

ஆரவுடன் திருமணம் குறித்து உறுதிசெய்கிறார் ஓவியா..! விரைவில் சஸ்பென்ஸ்

இன்னும் சில மாதங்கள் கழித்து என்னைப்பற்றி கிசுகிசு எழுத வேண்டிய அவசியம் இல்லாத அளவுக்கு என் வாழ்க்கையில் ஒரு சம்பவம் நடக்க இருக்கிறது. பொறுத்திருந்து பாருங்கள்’ என்று ஒரு ஹாட் சஸ்பென்ஸ் வைக்கிறார் நடிகை ஓவியா.

எனக்கும், ஆரவுக்கும் இடையேயான உறவு குறித்து பேசியுள்ளார் ஓவியா. பிக் பாஸ் வீட்டில் இருந்த போது ஓவியாவுக்கு ஆரவ் மீது காதல் வந்தது. நிகழ்ச்சி முடிந்த பிறகு ஆரவும், ஓவியாவும் ஜோடியாக ஊர் சுற்றுகிறார்கள். ஜோடியாக வெளிநாட்டிற்கு சென்று வருகிறார்கள்.

அவர்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதே அவர்களின் ரசிகர்களின் விருப்பம். இந்நிலையில் ஓவியா பிரபல ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தற்போது சினிமாவில் பிசியாகுபவர்களை பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன். என்னை தேடி பட வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கின்றனன. சில படங்களை நான் தேர்வு செய்துள்ளேன்.

எனக்கும் ஆரவுக்கும் இடையே நல்ல உறவு உள்ளது. எனக்கு அவர் மீது அக்கறை உள்ளது. அவருக்கும் என் மீது அப்படி தான். இந்த உறவுக்கு பெயர் நட்பு என்று நான் கூற மாட்டேன் என்றார்.

படங்களில் நடித்து முடித்தபின் ஆரவ், ஓவியா திருமணம் குறித்து அவரிடம் இருந்து ஒரு நல்ல பதிலை எதிர்பார்க்கலாம் என தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *