Home / சினிமா / தல 59ல் இவர்தான் ஹீரோயின்..! நஸ்ரியா இல்லை? அதிகாரபூர்வ தகவல்

தல 59ல் இவர்தான் ஹீரோயின்..! நஸ்ரியா இல்லை? அதிகாரபூர்வ தகவல்

நடிகர் தல அஜித் அடுத்து வினோத் இயக்கத்தில் பிங்க் பட ரீமேக்கில் நடிக்கிறார். இந்த படத்தை நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார்.

இந்த படத்தில் நஸ்ரியா மற்றும் கல்யாணி ப்ரியதர்ஷன் ஆகியோர் நடிக்கின்றனர் என ஒரு தகவல் உலா வந்தது.

இந்நிலையில் தயாரிப்பாளர் அளித்துள்ள பேட்டியில் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார். மேலும் பாலிவுட் நடிகை வித்யா பாலன் அஜித்தின் ஜோடியாக நடிக்கிறார் என கூறியுள்ளார்.

இதுஒருபுறமிருக்க பிங்க் படத்தில் நடித்திருந்த Andrea Tariang மற்றும் அபிராமி வெங்கடாச்சலம் ஆகியோரும் தமிழ் ரீமேக்கில் நடிக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *