Home / சினிமா / ஆபாச இணையதளங்களில் எனது புகைப்படங்களை வெளியிடுகின்றனர் – பாடகி சின்மயி கவலை

ஆபாச இணையதளங்களில் எனது புகைப்படங்களை வெளியிடுகின்றனர் – பாடகி சின்மயி கவலை

பாடகி சின்மயி எப்போது மீடு பற்றி குற்றச்சாட்டுகள் சொன்னாரோ அது முதல் அவர் சமூக வலைத்தளங்களில் அதிக விமர்சனங்கள் சந்தித்து வருகிறார்.

பொது இடங்களில் அவர் அணியும் உடையும் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகிறது. “நீங்கள் பொதுஇடங்களில் சேலை மட்டும் அணிந்து செல்லுங்கள்” என ஒருவர் ட்விட்டரில் கேட்டதற்கு சின்மயி பதில் அளித்துள்ளார்.

“அப்படி நான் சேலை அணிந்து வந்தால் என் இடுப்பு மற்றும் மார்பு தெரியும்படி போட்டோ எடுத்து அதை வட்டமிட்டு ஆபாச இணையதளங்களில் போட்டுவிடுகின்றனர். அதன் பின் அதை பார்த்து சுயஇன்பம் காண்பதாக எனக்கே மெசேஜ் அனுப்புகின்றனர். சேலை அணிந்தாலும், ஜீன்ஸ் அணிந்தாலும் நான் இந்தியன் தான்” என சின்மயி கூறியுள்ளார்.

வேண்டுமானால் உங்களுக்கு ஸ்கிரீன்ஷாட் அனுப்புகிறேன் என சின்மயி மற்றொரு ட்விட்டில் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *