Home / சினிமா / உயிருக்கு போராடும் நிலையில் லேசா லேசா காமெடி பட நடிகர் ஸ்ரீனிவாசன்

உயிருக்கு போராடும் நிலையில் லேசா லேசா காமெடி பட நடிகர் ஸ்ரீனிவாசன்

ஷாம், விவேக், திரிஷா உள்ளிட்ட பலர் நடித்திருந்த லேசா லேசா படத்தில் நடித்திருந்தனர் ஸ்ரீனிவாசன். அவர் மலையாள சினிமாவில் முன்னணி குணச்சித்திர நடிகர்களில் ஒருவர். ஸ்ரீனிவாசன் தற்போது திடீர் உடல்நல பிரச்சனையால் மருத்துவமனையில் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

“அவர் இதயம் செயல்பட பிரச்சனை உள்ளது. நுரையீரலில் தண்ணீர் உள்ளது. உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பிரச்சனைகள் அவருக்கு உள்ளது” என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மேலும் அவர் வெண்டிலேட்டரில் உள்ளதாகவும் அடுத்த 24 மணி நேரத்திற்கு அவரது நிலை அதிதீவிரமாக கண்கானிக்கவுள்ளதாகவும் மருத்துவர்கள் கூறிவுள்ளனர்.

நடிகர் உயிருக்கு போராடும் நிலையில் இருக்கும் செய்தி வெளியானதும் ரசிகர்கள் வருத்தத்தில் மூழ்கியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *