Home / சினிமா / பானுபிரியா சிறுமியை கொடுமைப்படுத்திய வழக்கில் திடீர் திருப்பம்!.. அதிரடி கைது யாரை தெரியுமா..?

பானுபிரியா சிறுமியை கொடுமைப்படுத்திய வழக்கில் திடீர் திருப்பம்!.. அதிரடி கைது யாரை தெரியுமா..?

அண்மையில் பானுப்பிரியாவின் வீட்டில் வேலை பார்த்து வந்த 14 வயது சிறுமிக்கு பானுப்பிரியாவின் அண்ணன் பாலியல் தொந்தரவு செய்ததாகக் கூறி அந்த சிறுமியின் தாய் சில நாட்களுக்கு முன்பு, ஆந்திர மாநிலம் சாமர்லகோட்டயில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

ஆனால் தற்போது இவ்வழக்கின் திடீர் திருப்பமாக புகார் கொடுத்த சிறுமியின் தாயார் பிரபாவதியை பொலிஸார் கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆரம்பத்தில் சிறுமியின் தாயார் பொலிஸில் கூறியுள்ளதாவது, மாதம் 10 ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்கு சிறுமியை பானுப்ரியா வீட்டிற்கு வேலைக்கு அனுப்பினாராம். ஆனால் ஒன்றரை வருடங்களாக சம்பளம் கொடுக்கப்படவில்லை, மேலும் பானுப்ரியாவின் அண்ணன் கோபாலகிருஷ்ணன் பாலியல் தொல்லை கொடுத்தார் என்று கூறினார்.

எனினும் தற்போது பொலிஸார் சந்தியாவிடம் விசாரித்தபோது “தன்னை கொடுமைப்படுத்தவில்லை என்றும், நன்றாக பார்த்துக்கொண்டதாகவும் கூறியுள்ளார். அவருக்கு 18 வயது என்று சொல்லித்தான் என் வீட்டிற்கு வேலைக்காக அழைத்து வந்தனர். இதெல்லாவற்றையும் பிரபாவதியும் (சிறுமியின் தாயார்) ஒப்புக்கொண்டதுடன் மகள் திருடியதையும் ஒப்புக்கொண்டார்.

தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பானுப்பிரியா கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *