Home / சினிமா / விஸ்வாசம் படம் மூலம் வசூல் சாதனை நாயகனாக மாறிய அஜித் – விபரம் உள்ளே

விஸ்வாசம் படம் மூலம் வசூல் சாதனை நாயகனாக மாறிய அஜித் – விபரம் உள்ளே

அஜித்தின் விஸ்வாசம் படம் இந்த பொங்கலுக்கு வெளியானது. கிராமத்து பின்னணியில் குடும்பங்களை கவரும் வண்ணம் இருந்த இப்படம் எல்லா இடங்களிலும் அமோகமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

ரூ. 200 கோடி தாண்டியிருக்கும் இப்படம் பிப்ரவரி மாதம் முழுவதும் பல இடங்களில் அதிக திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. படம் வெளியாகி இன்றோடு 25வது நாளை எட்டியுள்ளது, இன்றும் தமிழ்நாட்டில் 275 திரையரங்குகளில் வெளியாகிறது.

தமிழ் சினிமாவிலேயே மெகா மகா பிளாக் பஸ்டர் படமாக அமைந்துள்ளது, வசூலிலும் சரி, ரசிகர்களின் ஆதரவு சரி படத்திற்கு ஏகபோகமாக வந்துள்ளது. இதன்மூலம் சாதனை நாயகனாக அஜித் மாறியிருப்பது தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *