Home / சினிமா / இப்படி பட்டவர் தான் தாடி பாலாஜி…! உண்மை முகத்தை போட்டுடைத்த பிரபலம்

இப்படி பட்டவர் தான் தாடி பாலாஜி…! உண்மை முகத்தை போட்டுடைத்த பிரபலம்

படங்களில் காமெடி காட்சிகள் நடித்து பிரபலமானாலும் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி மூலம் பலரின் பார்வைக்கு வந்தவர் தாடி பாலாஜி.

இவரை பற்றி பிரபல தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் காயத்ரி கிஷோர் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில், குடும்பத்துடன் சொந்த ஊருக்கு காரில் கிளம்பினோம். அப்போது உளுந்தூர் பேட்டையில் ஹோட்டலில் சாப்பிட்டு கிளம்பும் போது கார் ஸ்டார்ட் ஆகவில்லை.

அப்போது பக்கத்தில் இருந்த கார் ஓட்டுநர் விசாரித்தார், அந்த காரில் தாடி பாலாஜி இருந்துள்ளார்.

தாடி பாலாஜி கார் மெக்கானிக்கு தகவல் கொடுத்துவிட்டு கிளம்பினார். ஆனால் புறப்பட்ட கார் யூடர்ன் அடித்து எங்களது கார் பக்கத்தில் வந்தது.

அதில் இருந்து தாடி பாலாஜி, என்ன பிரச்னை வேறு ஏதாவது ஹெல்ப் வேண்டுமா என்று கேட்டார், நாங்கள் எதுவும் வேண்டாம் என்றோம். நான் யார் என்று தெரியாது ஆனால் சக மனிதராக என்ன பிரச்சனை உதவி வேண்டுமா என்று கேட்டார்.

ஆரம்பத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் எல்லோருடனும் அன்பாக இருப்பது போல் நடிக்கிறாரா என்று நினைத்தேன், இப்போது நிஜத்திலும் அவர் அப்படித்தான் என தெரிந்ததாக பேசியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *