Home / செய்திகள் / தங்கையை சீரழித்து கர்ப்பமாக்கிய இளைஞர் பேசிய பேச்சு

தங்கையை சீரழித்து கர்ப்பமாக்கிய இளைஞர் பேசிய பேச்சு

சிறுமியை கர்ப்பமாக்கி திருமணத்திற்கு மறுத்த வாலிபரை மகளிர் காவல்துறையினர் போஸ்கோ சட்டத்தில் கைது செய்தனர்.

போடியை அடுத்துள்ளது குரங்கனி மலை கிராமம். இங்குள்ள நடுபட்டியில் வசிப்பவர் கருப்பசாமி மகன் சத்தியராஜ். 21 வயதான இவர் ஜீப் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார்.

இவர் அதே பகுதியில் வசித்து வந்த 17 வயது சிறுமியுடன் பழகி வந்தார். இதில் அந்தச் சிறுமி கர்ப்பமானார். இது குறித்த விபரம் சிறுமியின் பெற்றோருக்கு தாமதமாக தெரிந்தது.

இதனால் அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். சிறுமிக்கு கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது.

தனது மகளிடம் கேட்டபோது சத்தியராஜூடன் ஏற்பட்ட பழக்கத்தில் தான் குழந்தை பிறந்தது எனக் கூறினார். இதனையடுத்து தனது மகளை திருமணம் செய்து கொள்ளும் படி அவரது பெற்றோர் சத்தியராஜிடம் கூறினர்.

ஆனால், அவர் தனக்கு தங்கை உறவு முறை என்பதால் அவரைத் திருமணம் செய்து கொள்ள முடியாது என மறுத்து விட்டார்.

இதனால் சிறுமியின் பெற்றோர் குரங்கனி காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வழக்குப் பதிவு செய்து சத்தியராஜை கைது செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *