Home / சினிமா / பிரகாஷ்ராஜின் முதல் மனைவி யார் தெரியுமா? ஏன் விவாகரத்து பெற்றார் தெரியுமா..?

பிரகாஷ்ராஜின் முதல் மனைவி யார் தெரியுமா? ஏன் விவாகரத்து பெற்றார் தெரியுமா..?

மனதில் உறுதி வேண்டும் படத்தில் அறிமுகமானவர் லலிதா குமாரி. நடிகர் பிரகாஷ்ராஜை திருமணம் செய்துகொண்டு சினிமாவிலிருந்து விலகினார்.

நடிகர் பிரகாஷ்ராஜூடன் திருமண வாழ்கையில் ஒருகட்டத்தில் உறவில் விரிசல் வந்து. விவாகரத்துப் பெற்றோம். அதன் பின் பிரகாஷ்ராஜ் இன்னொரு திருமண வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்துக்கிட்டார்.

லலிதா மேலும் கூறுகையில் நான், இரண்டு குழந்தைகளுடன் தனி வாழ்க்கையை வாழ ஆரம்பிச்சுட்டேன்.

நாங்க இருவருமே முதிர்ச்சியான சிந்தனையுடன் எடுத்த முடிவு அது. பழைய விஷயங்களை நினைச்சு வருத்தப்பட எதுவுமில்லை. அவர் மீது எனக்கும், என் மீது அவருக்கும் எப்போதும் அன்பு, மரியாதை இருக்கு என்று கூறியுள்ளார்.

இப்போ நாங்க நல்ல நண்பர்கள். மகள்கள் மீது அளவில்லா அன்பு வெச்சிருக்கார். அந்த அன்பு நாளுக்கு நாள் கூடிட்டே போகுது. பொண்ணுங்களின் படிப்பு உட்பட எங்க மூவரின் எல்லாத் தேவைகளையும் நிறைவு செய்துகொடுக்கிறார்.

நான் கடைசியா நடிகர் சங்க நிகழ்வில் அவரைச் சந்தித்துப் பேசினேன். அவரை நான் நேரில் சந்திக்கிறது குறைவா இருந்தாலும், பொண்ணுங்க எதிர்காலம் குறித்த ஒவ்வொரு விஷயத்திலும் ஆலோசிப்போம் என்றும் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *