வாராவாரம் வெளியாகும் அனைத்து தமிழ் படங்களையும் விமர்சித்து வருபவர் ப்ளூ சட்டை மாறன். அவர் சமீபத்தில் சார்லி சாப்ளின் 2 பட தயாரிப்பாளரிடம் பணம் கேட்டு மிரட்டினார் என போலீசில் புகார் அளிக்கப்பட்டது பெரிய சர்ச்சையானது.
அவர் படங்களை விமர்சிக்கும் விதத்தை பல நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது மாறன் அளித்துள்ள ஒரு பேட்டியில் வரும் ஏப்ரல் மாதத்தில் ஒரு படத்தினை இயக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். ஒரு நல்ல படம் எப்படி இருக்கும் என அதை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள் என தெரிவித்துள்ளார்.