Home / சினிமா / மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜய், அஜித்துடன் நடித்த பிரபல நடிகருக்கு நேர்ந்த பரிதாபம்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜய், அஜித்துடன் நடித்த பிரபல நடிகருக்கு நேர்ந்த பரிதாபம்

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில் பல படங்களில் நெகட்டிவ் ரோல்களில் நடித்தவர் சம்பத் ராம். அஜித்துடன் தீனா, விஜய்யுடன் ஜில்லா, ரஜினியுடன் கபாலி என படங்களில் நடித்தவர்.

தற்போது இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் நடித்து வருகிறார். கடந்த 15 நாட்களுக்கு முன் நடிகர் ராணாவுக்கும் இவருக்கும் நடந்த சண்டைக்காட்சியில் எதிர்பாராத விதமாக அடிபட்டுள்ளது.

பின் அவருக்கு முதலுதவி கொடுக்கப்பட்டு தொடர்ந்து அன்றைய நாள் படப்பிடிப்பை அவர் முடித்து விட்டார். சில நாட்களில் அவருக்கு தலையில் ஏதோ தொந்தரவு செய்துள்ளது.

இதனால் சென்னை விஜயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தபோது ரத்தம் உறைந்துள்ளது தெரிய வந்துள்ளது. இதனால் அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *