மலையாள உலகின் முன்னணி நடிகையான ஷகீலா கவர்ச்சி படங்களில் நடித்ததால் தென்னிந்திய முழுவதும் மிக பிரபலமானவர். தற்சமயம் படங்களில் அவ்வளவாக நடிக்காமல் இருக்கும் இவரது வாழ்க்கை வரலாறு படமாக உருவாகி வருகிறது.
இந்நிலையில் சினிமாவில் தனது அனுபவங்களை பற்றி ஷகீலா சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ளார்.
அதில், மோகன்லாலுடன் சோட்டா மும்பை படத்தில் நடித்த சமயம். அப்படத்தை மணியம்பிள்ள ராஜூ தயாரித்தார். படத்தில் நடித்து கொண்டிருக்கும்போதே எனது தாயாரின் சிகிச்சைக்காக முன்கூட்டியே எனது முழு சம்பளத்தையும் கேட்டேன். அவரும் கொடுத்தார்.
ஒரு கட்டத்தில் அவர் மீது அன்பு அதிகமாகி அவருக்கு காதல் கடிதம் ஒன்றை கொடுத்தேன். ஆனால் கடைசி வரை அதற்கு பதில் வரவில்லை என்றார்.