Home / சினிமா / தமிழ் சினிமாவில் புதிய வசூல் செய்த அஜித்தின் விஸ்வாசம் – முழு வசூல் விவரம் இதோ

தமிழ் சினிமாவில் புதிய வசூல் செய்த அஜித்தின் விஸ்வாசம் – முழு வசூல் விவரம் இதோ

சிவா-அஜித் கூட்டணியில் வந்த படங்களிலேயே அதிக வசூல் செய்து மக்களின் பேராதரவை பெற்றிருக்கும் படம் விஸ்வாசம்.

பொங்கலுக்கு குடும்பத்துடன் திரையரங்கிற்கு பார்க்கும் அளவிற்கு இப்படம் அமைந்திருந்தது. படத்தின் கதை, அதிலும் கிளைமேக்ஸ் அதில் அஜித்தின் நடிப்பு, பாடல்கள் என எல்லாமே மக்களால் பாராட்டப்பட்டது.

தமிழ்நாட்டில் இன்னும் படம் பல திரையரங்குகளில் ஹவுஸ் புல்லாக தான் ஓடிக் கொண்டிருக்கிறது. தற்போது படம் ரூ. 200 கிளப்பில் இணைந்துள்ளது. எந்தெந்த இடத்தில் எவ்வளவு வசூல் என்ற விவரம் இதோ,

தமிழ்நாடு– ரூ. 139 கோடி.
ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா, மற்ற இடங்கள்– ரூ. 18 கோடி.
வெளிநாடு– ரூ. 43 கோடி.
மொத்தமாக படம் ரூ. 200 கோடிக்கு வசூலித்துள்ளது.

இதனால் ரசிகர்கள் வழக்கம் போல் #Viswasam200CrsMegaBB போன்று டாக்குகளை கிரியேட் செய்து டிரண்ட் செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *