வாரணம் ஆயிரம் படத்தில் சூர்யாவின் காதலியாக நடித்திருந்தவர் நடிகை சமீரா ரெட்டி. அவர் அதன் பிறகு பிரபல தொழிலதிபர் Akshai Varde என்பவரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். அதன் பிறகு அவர் சினிமாவில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார்.
அவர்களுக்கு தற்போது 4 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில் தற்போது சமீரா மீண்டும் கர்பமாக உள்ளார். இரண்டாவது குழந்தையை எதிர்பார்த்து மொத்த குடும்பமும் காத்திருக்கிறது.
சமீரா கர்பமாக இருப்பதை உறுதி செய்யும் புகைப்படங்களும் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.