Home / சினிமா / இந்த வருடம் மட்டும் நயன்தாராவுக்கு இத்தனை புதிய படங்களா..? மகிழ்ச்சியில் ரசிகர்கள்

இந்த வருடம் மட்டும் நயன்தாராவுக்கு இத்தனை புதிய படங்களா..? மகிழ்ச்சியில் ரசிகர்கள்

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவின் டாப் ஹீரோவின். அவர் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிப்பது மட்டுமின்றி பல படங்களில் சோலோ ஹீரோயினாகவும் நடித்து வெற்றி பெற்று வருகிறார்.

இந்த வருட தொடக்கத்தில் அவர் நடித்த விஸ்வாசம் படம் வெளியாகி வசூல் சாதனை படைத்தது. அடுத்து நயன்தாராவின் நடிப்பில் ஐரா படம் மார்ச் 28ம் தேதி திரைக்கு வருகிறது.

அதுமட்டுமின்றி மே 1 ம் தேதி சிவகார்த்திகேயன்-நயன் நடித்த mr.லோக்கல் படம் திரைக்கு வருகிறார். அதன் பிறகு கொலையுதிர் காலம், சாயிரா நரசிம்ம ரெட்டி, லவ் ஆக்ஷன் ட்ராமா, தளபதி63 என வரிசையாக நயன்தாராவின் படங்கள் திரைக்கு வருகிறது.

இதனால் இந்த வருடம் நயன்தாரா கேரியரில் புதிய உச்சத்தை தொடும் என எதிர்பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *