Home / செய்திகள் / பொள்ளாச்சி சம்பவத்தை தொடர்ந்து நாகையில் நடந்த கொடூரம் – வீடியோ எடுத்து மிரட்டிய இளைஞர் இவன் தான்

பொள்ளாச்சி சம்பவத்தை தொடர்ந்து நாகையில் நடந்த கொடூரம் – வீடியோ எடுத்து மிரட்டிய இளைஞர் இவன் தான்

பொள்ளாச்சியில் சம்பவம் பெரும் பரபரப்போடு நகர்ந்துகொண்டிருக்கும் நேரத்தில் நாகை மாவட்டத்திலும் இளம் பெண்களை மயக்கி ஆபாச படமெடுத்து பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

நாகை மாவட்டம் வெளிப்பாளையம் பேட்டை தெருவை சேர்ந்த சுந்தர் இவர் ஆழியூர் தெற்கு தெருவை சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவர் நாகையில் உள்ள ஒரு செல்போன் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார்.

சுந்தர் அந்த கடைக்கு ரீசார்ஜ் செய்வதாக சொல்லி அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது சுந்தருக்கும் அந்த இளம் பெண்ணுக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. நாளடைவில் காதலர்களாக மாற்றி உள்ளது. இதையடுத்து இருவரும் கடந்த 1 வருடமாக காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், காதலன் சுந்தரின் நடவடிக்கையில் அந்த பெண்ணுக்கு சந்தேகம் ஏற்பட்டதால் அவர் சுந்தரிடமிருந்து விலகியே இருந்துள்ளார். இதையடுத்து சுந்தர் மீண்டும் அந்த பெண்ணை சந்தித்து சாமர்த்தியமாக பேசி மயக்கியிருக்கிறார்.

இந்நிலையில் தனது காதலியை காரைக்கால் பகுதியில் உள்ள கோவிலுக்கு அழைத்து சென்ற சுந்தர் அங்கு ஒரு அறையில் தங்கியுள்ளனர். அங்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து மயக்க நிலையில் அந்த பெண்ணுக்கு தெரியாமலேயே உல்லாசம் அனுபவித்து அதை செல்போனில் வீடியோவாகவும் பதிவு செய்துள்ளான் .

இந்த சம்பவத்தால் இளம்பெண் மீண்டும் சுந்தரிடம் பேசுவதை நிறுத்தி விட்டாராம். ஆனால் தன் செல்போனில் தெரியாமல் எடுத்த படத்தை பற்றி இளம்பெண்ணிடம் கூறி அடிக்கடி தனியாக வரவழைத்து உல்லாசம் அனுபவித்து வந்ததாக சொல்லப்படுகிறது.

இதனால் அவமானமடைந்த இளம்பெண் போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் சுந்தரை கைது செய்து விசாரணை நடத்தியதில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் சுந்தர் பல பெண்களிடம் காதலிப்பது போல் நடித்து ஆபாச படம் எடுத்து மிரட்டி எடுத்து வைத்திருந்துள்ளதையடுத்து அவரது செல்போனை கைப்பற்றிய போலீசார் போனில் இருந்த வீடியோக்களை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *