Home / சினிமா / உண்மையில் நான் கர்பமாக இருப்பது எனக்கே தெரியாது எமி ஜாக்சன் – காதலனுடன் எமி புகைப்படம் இதோ

உண்மையில் நான் கர்பமாக இருப்பது எனக்கே தெரியாது எமி ஜாக்சன் – காதலனுடன் எமி புகைப்படம் இதோ

தமிழ் சினிமா நடிகைகளில் ஒருசிலர் ஆரம்பத்திலேயே பெரிய நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பை பெறுவர். அப்படி வெளிநாட்டில் பிறந்த எமி ஜாக்சன் இந்திய சினிமா படங்களில் கலக்கி இருக்கிறார்.

சமீபத்தில் நடிகை எமி ஜாக்ஸன் தன் காதலருடன் நிச்சயதார்த்தம் செய்துகொண்டிருப்பதாக அறிவித்தனர். இந்நிலையில் சில நாட்கள் முன்பு எமி ஜாக்சன் திருமணத்திற்கு முன்பே கர்பமாக இருப்பதாக புகைப்படம் வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தினார்.

இது பற்றி பேசியுள்ள எமி ஜாக்சன், “உண்மையில் நான் கர்பமாக இருப்பது எனக்கே தெரியாது. 6 வாரங்கள் கழித்து தான் தெரிந்தது. இலங்கை, இந்தியா மற்றும் நியூ யார்க் என தொடர்ந்து உலகத்தை சுற்றிக்கொண்டிருந்தேன். கடினமாக இருந்தது.”

“என்ன நடக்கும் என்பது நம் கையில் இல்லை. ஆனால் ஒன்று மற்றும் நிச்சயம்.. ஆணோ பெண்ணோ குழந்தை பிறந்ததும் என்னுடன் அவன்/அவள் உலகம் சுற்ற வேண்டியதுதான். என் குடும்பத்தினரும் எனக்கு ஆதரவாக உள்ளனர்” என எமி தெரிவித்துள்ளார். இதோ காதலனுடன் அவர் வெளியிட்ட புகைப்படம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *