சென்னை குன்றத்தூர் பகுதியில் பெற்ற குழந்தைகளைக் கொலை செய்த அபிராமியும், சுந்தரமும் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டனர்.
கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி, காதலன் சுந்தரத்தின் ஆலோசனைபடி தனது 2 குழந்தைகளுக்கு பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்தார். மேலும் இதில் கார்னிகா துடிதுடித்து இறந்தார். ஆனால் மகன் அஜய் இறக்காததால், தலையணையால் முகத்தை அழுத்தி கொடூர கொலை செய்தார்.
பின்னர் காதலனுடன் அபிராமி தலைமறைவாக இருந்து வந்தார். அவரை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போலீஸார் பிடித்தனர். பின்னர் காதலன் சுந்தரத்தையும் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
ஒரே வேனில் அழைத்து வந்தனர்
இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணைக்காக புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அபிராமி, அவரது கள்ளக்காதலன் சுந்தரம் ஆகியோரை ஒரே வேனில் செங்கல்பட்டு நீதிமன்றத்திற்கு போலீசார் அழைத்து வந்தனர்.
பின்னர் நீதிபதி வேல்முருகன் முன் 2 பேரையும் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கின் விசாரணையை வரும் 10-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.