விஜய் சேதுபதி ஒவ்வொரு படங்களிலும் வித்தியாசமான வேடங்களை ஏற்று நடிக்கக்கூடியவர். அப்படியான சவாலை அவர் மிகவும் விரும்புகிறார். அண்மையில் கூட சூப்பர் டீலக்ஸ் படம் வெளியானது.
புதுமுக இயக்குனர்களாக தேர்வு செய்து அவர்களின் வாழ்விலும் ஒளியினை ஏற்ற கூடியவர். மேலும் தன் ரசிகர்களை மிகவும் அன்பாகவும் எந்தவொரு கட்டுப்பாடுமின்றி அணுக கூடியவர்.
இப்படிப்பட்ட இவர் மக்களின் கூட்ட நெரிசலின் மத்தியில் ரோட்டோர கடை ஒன்றில் உணவு வாங்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இது எதார்த்தமாக நிகழ்ந்ததா அல்லது படப்பிடிப்பிற்காகவா என்று தெரியவில்லை.